- மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
- 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
இங்கு மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 50முதல் 60 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக ரூ500 முதல் ரூ700 வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதன் விலை கிலோ ரூ.1600ஆக உயர்ந்தது. அதேபோல பிச்சி கிலோ ரூ.400, முல்லைரூ.300, செண்டு மல்லி ரூ.70, பட்டன் ரோஸ் ரூ.80 விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாட்டுத்தாவணி சில்லரை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது" என்று தெரிவித்தார்.