ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா
- ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவில் 47-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை விஸ்வக்சேனர் புறப்பாடு நடந்தது. உபயதாரர் கோச்சாயி அய்யர் குமாரர் ரவிக்குமார் நேற்று யாகசாலை மண்டபத்தில் ரெகுராமபட்டர் ஸ்ரீபதி பட்டர் ஆகியோர் தலைமையில் யாக பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து 9.30 மணியளவில் திருவிழா கொடி மேளதாளத் துடன் 4 ரத வீதியும் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் முன்புள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு நேற்றுஇரவு அன்ன வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடைெபற்றது. உபயதார் கன்னியப்பன் முதலியார், செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர்கள் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
வருகிற 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி உலாவரும் நிகழ்ச்சி, மாலையில் சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.