உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-05-26 07:55 GMT   |   Update On 2023-05-26 07:55 GMT
  • வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழா நடந்தது.
  • முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் வளையல்கார தெரு காளியம்மன் கோவில் 51-ம் ஆண்டு உற்சவ வைகாசி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்தி அம்மன் ஊஞ்சல் ஆட்டம், பூச்சொரிதல் விழாவும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. 2-ம்நாள் சுவாமி பெட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி, மாவிளக்கு எடுக்கப்பட்டது. 3-ம்நாள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீச்சட்டி எடுத்தல், பால்குடம், வேல் பூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. 4-ம் நாள் காலை முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. பூஜை ஏற்பாடுகளை பூசாரி பொன் பாண்டி செய்தார்.

Tags:    

Similar News