உள்ளூர் செய்திகள்

ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்ததின போட்டி பரிசளிப்பு விழா

காமராஜர் பிறந்ததின போட்டி பரிசளிப்பு விழா

Published On 2022-07-23 09:37 GMT   |   Update On 2022-07-23 09:37 GMT
  • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்ததின போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
  • அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது.

மதுரை

மதுரை நாடார் உறவின்றைக்குப் பாத்தி யமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமரா ஜரின் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பள்ளித்தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார்.

பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச்செயலாளர் குமார், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செ யலாளர் வி.பி.மணி, பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி, ஜெயராஜ்-அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் சூசை அந்தோணி ஆகியோர் பேசினர்.

சிறப்பு விருந்தினராக மதுரை இலக்கிய மன்றம் நிறுவனர் -தலைவர் அவனி மாடசாமி கலந்து கொண்டு காமராசர் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் அவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மதுரை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது. மதுரை புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசினையும், திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசினையும், மதுரை தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசினையும் பெற்றனர்.

தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News