உள்ளூர் செய்திகள்

கொட்டக்குடி அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

கொட்டக்குடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

Published On 2022-11-18 07:23 GMT   |   Update On 2022-11-18 07:23 GMT
  • மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
  • இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கொட்டக்குடி. இங்கு பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு வாரமாக சாமி ஆட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குதிரை பொட்டலில் இருந்து குதிரைகள் தூக்கிவரப்பட்டு மந்தையில் வைக்கப்பட்டது. பின் நேற்று மாலை மந்தையில் இருந்து கற்குடைய அய்யனார் கோவிலுக்கு தூக்கிச் செல்லப்பட்டது.

இதில் 6 கரைக்குதிரைகள் மற்றும் நேர்த்திக்கடன் குதிரைகளும் தூக்கிச் செல்லப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கொட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News