உள்ளூர் செய்திகள்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். (உள்படம்): சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய பெருமாள்.

விமரிசையாக நடந்த கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2023-06-03 08:15 GMT   |   Update On 2023-06-03 08:53 GMT
  • கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
  • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை

மதுரை மத்தியில் அமைந்துள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான கூடலழகர்பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து சுவாமி-அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை, கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 8-ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் குதிரை வாக னத்தில் வீதிஉலா வந்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் இன்று காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.

கோவிந்தா கோஷங்கள் முழங்க 6.30 மணி அளவில் ேதரோட்டம் தொடங்கியது. பெண்கள், இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திரு ப்பரங்குன்றம்சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசையந்து வந்து கண்கொள்ளா காட்சி யாக இருந்து. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்குள் தேர் நிலையை வந்தடைந்தது. தேேராட்டத்தை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். நாளை மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிநடக்கிறது. 5-ந்தேதி கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றாங்கரையில் உள்ள ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

மறுநாள் 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்தி ரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சன மாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.

Tags:    

Similar News