- சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.