ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்
- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
- எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடந்தது. இைதயொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சரவணபகவான்,சத்யன், ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ரசு உட்பட பலர் கலந்து கொண்டனர் .
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
அண்மையில் மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மதுரை மக்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சம்பந்தமாக தவறான தகவலை ெதரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ததாகவும் அதற்கு தமிழக அரசு தாமதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.
ஆரம்பத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த அளவு இடம் போதும் என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது அதிக இடம் வேண்டும் என்று கூறி அண்டர் பாஸ்ட் திட்டம் கைவிடப்பட்டது என திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது.
இதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதுவும் தவறான தகவல். இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறினால் தவறாக திரித்து கூறுவதாக சொல்கின்றனர்.
அண்மையில் தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டு வேன் என்று கூறியதாகவும், அவருக்கு கல்லறை அமைத்தது தி.மு.க. தான் என்றும் கூறி உள்ளார்.
காமராஜர் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை எப்போதும் பேசியது கிடையாது. இன்றளவும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர். அவரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.