உள்ளூர் செய்திகள்

திருமாறன்

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம்: திருமாறன் கண்டனம்

Published On 2022-11-17 08:31 GMT   |   Update On 2022-11-17 08:31 GMT
  • மதுரை மாநகராட்சியை கண்டித்து நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை திருமாறன் கண்டனம்.
  • சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது.

மதுரை

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கீழ சித்திரை வீதியில் மழை நீர் போக வழி இல்லை. பாதாள சாக்கடை கழிவுநீர் போக வழி இல்லை. பக்தர்கள் செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது. யாரை ஏமாற்ற இந்த கபட நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை.

மதுரை மக்களவை உறுப்பினராகவும் மாநகராட்சி துணை மேயராகவும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களே இருக்கும்போது இது போன்ற செயல் மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை வேலை வாங்க முடியாமல் மாநகராட்சி அலட்சியமாக இருப்பது போல அலட்டிக்கொண்டு போராட்டம் என்று மக்களை ஏமாற்றும் வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருக்கிறது.

மதுரையில் மட்டுமல்ல தமிழகத்திலேயும் தங்களது கூட்டணி கட்சிகள் தானே ஆட்சி செய்கிறது. எனவே கூட்டணி கட்சியில் வலியுறுத்தி இந்த அவல நிலையை போக்கி இருக்கலாமே. அதை விடுத்து போராட்டம் செய்வதை எந்த வகையில் மக்கள் நம்புவார்கள்.

வேண்டுமானால் இந்த மறியல் போராட்டத்திற்கு பதிலாக மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.பி. மற்றும் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே.

இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News