நகரை சுத்தமாக வைத்து கொள்ள மேயர்-கமிஷனர் வேண்டுகோள்
- நகரை சுத்தமாக வைத்து கொள்ள குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும் என மேயர்-கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று தொட்டிகள், மின்மோட்டார்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து இன்று மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செல்லூர் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட னர்.
முன்னதாக 34-வது வார்டு அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி பகுதி களில் தீவிர தூய்மை பணிகள் நடைபெறுவதை அவர்கள் பார்வையிட்டனர். அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காலனியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், காலனி பகுதியினை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கந்தப்பா, சந்தனம், ஆரோக்கிய சேவியர், அலெக்ஸ்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுப்புராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.