உள்ளூர் செய்திகள்

ஆரப்பாளையம் பகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் இடத்தை மேயர் இந்திராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து மேயர் நேரில் ஆய்வு

Published On 2023-04-20 09:48 GMT   |   Update On 2023-04-20 09:48 GMT
  • வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
  • பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

மதுரை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதி களில் வளர்ச்சி திட்ட பணி களான சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள் தூர் வாருதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், பள்ளிகள் சீரமைப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு, நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம்-3, வார்டு எண்.55 அண்ணாத்தோப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரசவித்த தாய்க்கு தமிழக அரசின் தாய்சேய் நலபெட்டகம் மற்றும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

மண்டலம்-3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் புதியதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வரும் பணியினையும், வார்டு எண்.70 துரைச்சாமி நகர் பகுதியில் புதிய உப கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியையும், நேருநகர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணியையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மண்டலம்-2 வார்டு எண்.34 அண்ணாநகர் மெயின் ரோட்டில் ( டுரிப் நிதி கட்டம் 1 கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப் பட்டு வரும் பணியையும் மேயர் பார்ர்வையிட்டார்.

அப்நபோது நகர பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் தயாநிதி. மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் மனோகரன், வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News