மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம்
- பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
- மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.