29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை
- 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,
மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.