திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழா நிறைவு
- திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று மாலை அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது.
- இன்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலஸ்தானத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதே போல கோவிலின் தனி சன்னதியில் கோவர்த்தனாம்பிகை அம்மனும் அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் கோவிலில் நவராத்திரி விழா 9 நாட்களும், 10-வது நாளில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருளி பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் அம்பு விடும் விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த
26-ந்் தேதி நவராத்திரி விழா தொடங்கியது.
விழாவையொட்டி கோவிலின் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன், மகிஷாசு ரவர்த்தினி, திருக்கல்யாணம், சிவபூஜை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிறைவு நாளான இன்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளும் சுப்பிரமணியசுவாமி அங்கு 8 திக்கிலும் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.