- ரூ.31 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார்.
- பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
என்.ஹெச்.எம். மூலம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட 2 மாடி கட்டிடம் கட்டப்ப ட்டு வருகிறது. இந்த கட்டிட் பணிகளை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 130 விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்கு உள்ளானவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்க்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே மரண மடையும் சதவீதமும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க 2 முயற்சிகளை மேற்கொண்டோம்.
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடைபெறும் 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி னோம். அதன் விளைவாக இப்போது ரூ.100 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலூர் அரசு மருத்துவ மனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் 150 படுக்கை கள், நவீனப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கட்டி டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கட்டடப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் முழுமை பெறும் போது மேலூர் பகுதியில் விபத்து மற்றும் விபத்து மரணங்கள் பெறு மளவு குறையும். பொது மருத்துவ வசதியும் பெரு மளவு முன்னேறி இருக்கும். மருத்துவத்து றையில் மற்ற பகுதியைவிட முன்னேறிய பகுதியாக முன்னுதார ணமான பகுதியாக மேலூர் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் முகமது யாசின், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் வெங்கடாசலம், மேலூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர் சர்மிளா பேகம் அப்துல் சலாம், மற்றும் டாக்டர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.