உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ்-வுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை-எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2022-08-19 09:53 GMT   |   Update On 2022-08-19 09:53 GMT
  • ஓ.பி.எஸ்-வுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார்.
  • அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

திருப்பரங்குன்றம்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திருப்பரங்குன்றத்தில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலிமைமிக்க தீர்ப்பினை தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர். அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 2,663 பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக எடப்பா டியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர்.

இடைக்கால தீர்ப்பைப்பெற்று சிலர் அறிக்கை விடுகின்றனர்.இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. மேல்முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் உயர்ந்த குழு என நீதிமன்றமே கூறியுள்ளது.

கசப்பை மறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.யுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்?

இடைக்கால தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் மூலம் இறுதியான தீர்ப்பை பெறலாம்.

ஓ.பி.எஸ். எடப்பாடி யாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு.

கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இரட்டைத் தலைமையே வேண்டாம் என கட்சியினர் கூறும் நிலையில் கூட்டுத் தலைமையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

எப்பொழுதெல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தவுடன் தென் மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ். வருகிறார். இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது ஜாதி- மதத்திற்கு அப்பாற்பட்டது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு தனி செல்வாக்கு கிடையாது.

தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஏனென்றால் தென்பகு திகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலே வழங்கியவர். அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்கா ரராக எடப்பாடி உள்ளார். நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.க. இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் எம்.ஆர். குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News