- தர விதிமுறைகளை பின்பற்றாத 116 உணவகங்களுக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது.
- தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகிறது. இதில் சில உணவகங்களில் தரமற்ற, கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது, கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலை யில் உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 658 உணவகங்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 48 உணவ கங்கள் விதிமுறைகளின் படி இயங்கவில்லை என தெரியவந்தது. அந்த உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் உணவகம் அல்லாத பேக்கரி, தேநீர் கடைகள், பலகாரக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. விதிகளின் படி இயங்காத 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிக ளின்படி இயங்காத அல்லது புகாரு க்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதேபோன்று உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டு புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது