உள்ளூர் செய்திகள்

தலைமை செயலாளர்-டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ்

Published On 2022-12-05 06:53 GMT   |   Update On 2022-12-05 06:53 GMT
  • பூரண மதுவிலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர்-டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
  • இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் காந்திராஜன். இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மது விலக்கு விவகாரம் அரசின் கொள்கை முடிவு.

இதில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அரசு பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரும். அதற்கான கால அட்டவணை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தலைமை செயலாளர் டாஸ்மாக் மேலாண் இயக்குநர், ஆயத்தீர்வை இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News