உள்ளூர் செய்திகள்

பட்டா மாறுதல்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற பிறகு கையெழுத்திடுகின்றனர்

Published On 2023-04-17 08:20 GMT   |   Update On 2023-04-17 08:20 GMT
  • பட்டா மாறுதல்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற பிறகு கையெழுத்திடுகின்றனர்.
  • உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை

மதுரை ஐகோர்ட்டில் அழகப்பன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் கிராமத்தில் எனது விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆவணங்களின் அடிப்ப டையில் ஆக்கிரமிப்புகளை உரிய காலத்திற்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர், அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

நீதிபதிகள் கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பாக ஏன்? எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்.

பல்வேறு வழக்குகளிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கின்றன. இதனால் கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால் சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் கால அவகாசம் வழங்க தயாராக உள்ளது. ஆனால் அவ்வாறாக ஏன்? எந்தவித மனுவும் தாக்கல் செய்வதில்லை.

இத்தகைய செயல்கள் ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. மேலும் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்க ளில் பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டே அதிகாரிகள் பட்டா மாறுதல் செய்கின்றனர். இதற்காக தனி புரோக்கர்கள் செயல்படுகின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரி வித்தனர்.

லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் நீதிமன்ற உத்தரவை சட்டத்தின் அடிப்படையில் எப்படி பின்பற்ற வேண்டும் என அனைத்து தாசில்தாருக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.

அதன் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலெக்டர் தரப்பில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மாவட்ட கலெக்டர் மீதான அவ மதிப்பு வழக்கினை முடித்து வைத்தார். மனுதாரரிடம் மேலும் கோரிக்கை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News