- திருப்பரங்குன்றத்தில் நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
- மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருப்பரங்குன்றம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதில் மதுரை மாநகராட்சியில் 45 இடங்கள் உட்பட மதுரை மேற்கு மேற்கு மண்டலத்தில் 11 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
திருப்பரங்குன்றத்தில் நடந்த நலவாழ்வு மைய திறப்பு விழாவிற்கு மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல மருத்துவர் தேவி வரவேற்றார். மேற்கு மண்டலத்தலைவர் சுவிதா விமல் குத்துவிளக்கேற்றி மையத்துதை வக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் முருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாமிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பஙேக்ற்றனர். தொடர்ந்து கர்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இதேபோல திருநகர் மகாலெட்சுமி காலனியில் நகர்புற நலவாழ்வு மையத்தினை மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.