உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டிடம்.

நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு

Published On 2023-02-03 06:06 GMT   |   Update On 2023-02-03 06:06 GMT
  • நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

12-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் வகுப்பறையில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் நெருக்கடியாக அமர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் சமையல் அறை அருகே சேதமான ஓட்டு மேற்கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7ம் வகுப்பறை களை இடித்து அப்புறபடுத்தி காலி இடமாக இருந்து வந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் யூனியன் பொறியாளர் மேற்பார்வையில் பள்ளி விடுமுறை நாளில் கழிப்பறை கட்ட குழி தோண்டி உள்ளனர்

இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மேலாண்மை குழு தலைவர் கலா கூறுகையில், இப்பள்ளி யில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் வேளையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7-ம் வகுப்பு கட்டிடம் அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.

இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை மற்ற வகுப்பறை கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடந்து வரும்நிலையில் சமையல் அறை அருகிலே விடுமுறை நாளில் கழிப்பிடம் கட்ட யூனியன் அதிகாரிகள் குழி தோண்டி உள்ளனர். காலியான பள்ளி இடத்தில் கான்கிரீட் கட்டிட வகுப்பறை கட்டி மாணவர்களில் இடநெருக்கடியை போக்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News