30 குடும்பங்களின் வீட்டு வரியை செலுத்திய ஊராட்சி மன்ற தலைவர்
- அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
- கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.
கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.