ரெயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போது கடந்து சென்ற பயணிகள் ரெயில்
- ரெயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போது பயணிகள் ரெயில் கடந்து சென்றது.
- உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
மதுரை ெரயில் நிலையம் அருகே நின்றிருந்த ரெயில் பெட்டிகளில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்கள் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.
ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடி லைன் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்து டன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் ரெயில் பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்தன.
அப்போது அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் ரெயில் கடந்து சென்றது. அப்போது அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
தீ விபத்து நடந்த தண்ட வாளம் அருகே பயணிகள் ரெயில் கடந்து சென்றபோது தீ அந்த ரெயிலை தொட்டுவிடும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபோன்ற பெரும் விபத்து நடக்கும்போது அந்த பகுதியில் பாதுகாப்பை கருதி ரெயில் போக்கு வரத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் இன்று காலை தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ரெயில் பெட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரெயில் செல்ல அனுமதி அளித்தது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய விசார ணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.