நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
- நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
- நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மதுரை கான்சாமேட்டு தெருவில் ராமதாஸ் மகன்கள் திருநாவுக்கரசு, பிரசன்னா மற்றும் ரத்தினம் மகன் ஜெயராமன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து "ஸ்ரீ காயத்திரி ஜூவல்லர்ஸ்" என்ற பெயரில் நகை கடையை தொடங்கினர்.
மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் நகையை முதலீடு செய்தால் அதிக வட்டி (15 சதவீதம்) தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பெற்றனர். பின்னர் அதற்குரிய பணத் தையோ, நகைகளையோ திரும்ப தராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப் பட்ட புகார்தாரர் மதுரை பொருளாதார குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவை யில் உள்ளது.
மேற்கண்ட நகை கடை யில் நகைகளை முதலீடு செய்து ஏமாந்த பொது மக்கள் அசல் ஆவணங்க ளுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன் பேரில் உரிய சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.