ஆன்லைன் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
- ஆன்லைன் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
- அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
சென்னை வில்லிவாக்கம் பாலிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஜாபர் என்பவர் ராமநாத புரம் முத்துபுரம் அக்ரகாரம் என்ற முகவரியிலும், ராமநாதபுரம் பாரதிநகர் அருள்நகர் நீலாவதி காம்ப்ளக்ஸ் என்ற முகவரியிலும் "வாகூ நெட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிதிநிறுவனத்தை ஆன்லைன் மூலம் தொடங்கினார்.
ஆன்லைன் ரியல் எஸ்டேட், ஆன்லைன் அட்வர்டைசிங் புரோகிராம், ஆன்லைன் ஜாப் ஒர்க் போன்ற ஆன்லைன் பிசினஸ் மூலம் பகுதி நேர வேலை தருவதாகவும், இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில ங்களில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருவதாவும் கூறி தொலைகாட்சி மூலம் விளம்பரம் செய்தார்.
அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு ஆன்லைனில் தருவதுடன் அவர்களின் பணத்தை தொழில்களில் முதலீடு செய்தால் அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து 6 மாதத்தில் 3 மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ராமநாதபுரம் செல்வகுமார் நீதிமன்றத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் மாறுதலாகி இந்த வழக்கா னது மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
ஆகையால் இவர்களிடம் "வாகூ நெட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்க ளுடன் மதுரை பொருளா தார குற்றப்பிரிவு, எண். 39 விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இதேபோன்று மதுரை கரிமேடு தெற்குமடம் பகுதியை சேர்ந்த செல்வ ராஜ், வைகை வடகரை பகுதியில் "அயன் கியாஸ் ஏெஜன்சீஸ்" என்ற பெயரில் சூப்பர் கியாஸ் நிறுவன முகவராக இருந்தார். அதன் பெயரில் தீபாவளி சிறப்பு பண்டு நிறுவனமும் நடத்தினார்.
வாரம் ரூ.100 வீதம் 52 வாரங்கள் செலுத்தினால் முடிவில் ரூ.5 ஆயிரத்து 200க்கு வட்டியுடன் ரூ.7 ஆயிரம், வாரம் 10 பேருக்கு அடுப்பு, 2 கிேலா சிலிண்டருடன் இணைப்பும், 25 சீட்டு பிடிக்கும் நபர்களுக்கு ஒரு சீட்டு இலவசம் எனவும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இவர் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்ததாக கரிமேடு கார்த்திகேயன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.
எனவே இந்த மோசடி நபரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஆவணங்க ளுடன் மதுரை விஸ்வநாத புரம் மெயின் ரோட்டில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.