கொடுக்க மனமில்லாத உங்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள்
- மேதாவி போல பேச வேண்டாம் கொடுக்க மனமில்லாத உங்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என நிதி அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
- ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது.
மதுரை
மதுரையில் 29-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இது தொடர்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-
வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும், 29-ந் தேதி காலை விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விருதுநகர் செல்லும் வழியில் கரிசல்பட்டியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது,
அதேபோல் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்.
நிதியமைச்சர் சில குற்றச்சாட்டுகளை கூறியு ள்ளார்.
நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள நிதி அமைச்சருக்கு மக்களுடைய நாடி துடிப்பு தெரியவில்லை. 4 தலைமுறை அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள்?
30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்ற நிதி அமைச்சருக்கு அரசியல் வேறு, கம்பெனி வேறு என்பது தெரியவில்லை.
தி.மு.க. ஆட்சியில் 2021-22-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது, 2022-23-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது ஆக இந்த 1 1/2 ஆண்டு காலத்தில் ரூ. 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள்? வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?
நிதி அமைச்சர் பேச்சில் வல்லவராக இருக்கலாம். செயல் வடிவில் அல்ல. உங்களுக்கு முன்பே அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்.
நீங்கள் மட்டுமே மேதாவி என்பது போல் பேசக்கூடாது. 10 வருடங்கள் அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரிய வில்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.
தற்போது மின் கட்டணம் உயர்த்த ப்பட்டுள்ள து, சொத்துவரி உயர்த்தப்ப ட்டுள்ளது இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும்? அந்தத் துறைகளுக்கு தானே சேரும்? அதுவும் தமிழ்நாடு அரசு தானே? அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே? நலத்தி ட்டத்துக்கான அந்த வருவாய் செய ல்படுத்த ப்படுகிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.
கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனோ பேரிடர் காலத்தில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்கும் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, திட்டத்தை ரத்து செய்யவில்லை. பேரிடர் காலங்களில் திட்டங்களை தள்ளி வைத்தது வேறு. தற்போது கொள்கை ரீதியாக திட்டங்களை ரத்து செய்துள்ளது வேறு. ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.