மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்; வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு
- மேலூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்.
- 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலூர்
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், சாத்தமங்கலம், தனியாமங்கலம் சருகு வலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, வெள்ளலூர் உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மக்களிடம் எம்.பி., உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், வேளாண்மை அலு வலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வடக்கு வலைய பட்டி, வெள்ளலூர் கிரா மங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய், மரக் கன்றுகள், மருந்து அடிக்கும் ஸ்பிரே ஆகியவற்றை எம்.பி. வழங்கினார். 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.
தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் கீழையூர் பேருந்து நிறுத்தம், தனியாமங்கலம் ரேஷன் கடை ஆகியவற்றையும் வெங்கடேசன் பார்வையிட்டார்.