உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பைப்கள்.

ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பைப் திருட்டு

Published On 2022-11-06 07:54 GMT   |   Update On 2022-11-06 07:54 GMT
  • திருமங்கலத்தில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பைப் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனம் 5ஜி இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

இதற்காக நகர் முழுவதும் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்கு 49 பைப்புகள் ஒரு இடத்தில் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 29 பைப்புகளை கடந்த 2-ந் தேதி முதல் காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் மதுரை கூடல்நகரை சேர்ந்த சீனிநிதன் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது35) மற்றும் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (42), செல்லூர் விஸ்வநாதன் (40), கோரிப்பாளையம் பிரவீன்ராஜ் (32) உள்பட 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News