உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு
- மேலூர் அருகே கோவில் திருவிழாவில் 1008 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
- மக்கள் நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும் இந்த வழிபாடு நடப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலூர்
மேலூர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சூரக்குண்டு. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் பெரிய சூரக்குண்டில் இருந்து1008 பெண்கள் கிராம மந்தையில் இருந்து தலையில் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சின்ன அடக்கி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சின்ன அடக்கி, பெரிய அடக்கி மற்றும் ஆண்டி அரசன் ஆகிய தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இவ்வாறு செய்வதால் பாரம்பரியம் பின்பற்றப்படுவதாகவும் மக்கள் நலனுக்காகவும் விவசாயம் செழிக்கவும் பொங்கல் வழிபாட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.