உள்ளூர் செய்திகள்

கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர். அருகில் இளைஞரணி துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் மற்றும் பலர் உள்ளனர்.

கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-06-20 09:27 GMT   |   Update On 2022-06-20 09:27 GMT
  • கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார்.

விழாவில் தென்பழஞ்சி பகுதி முழுவதும் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போட்டனர். இதில் காயத்ரி என்பவர் முதல் பரிசான பிரிட்ஜை வென்றார். 2-ம் பரிசாக வாஷிங்மெஷினை அருணா பெற்றார். நதியா என்பவர் 3-ம் பரிசாக மிக்ஸியும், மகாலட்சுமி என்பவர் 4-ம் பரிசான கிரைண்டரையும் பெற்றனர்.

மேலும் சிறப்பாக கோலம் போட்ட 8 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குக்கர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 2 பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் நான்ஸ்டிக் தவா வழங்கப்பட்டது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் விமல் முன்னிலை வகித்தார்.

தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கிளைசெயலாளர்கள் பரிதி, கருப்பையா, போதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News