பால் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம்
- பால் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் வெள்ள லூர், கோட்ட நத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஊராட்சி ஆகிய கிளை சங்கங்களின் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் வெள்ளலூர் விலக்கில் பால் விலையை உயர்்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சர்ச்சில், துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
கோட்ட நத்தம்பட்டி பால் உற்பத்தி யாளர் சங்க தலைவர் கந்தப்பன் மற்றும் பல்வேறு கிளைகளின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பா ண்டி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அடக்கி வீரணன் ஆகியோர் பேசினர். பால் உற்பத்தியா ளர்களுக்கு தொடர்ந்து கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. மாட்டு தீவன விலை உயர்ந்து, பராமரிப்பு செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பால் லிட்டருக்கு ரூ.40 விலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தீவன மூடை ஒன்றுக்கு ரூ.200 மானியத்தொகையை திரும்ப வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்ட்டது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அவர்கள் தங்களது கோரிக்கையை குலவை யிட்டு வலியுறுத்தியது நூதனமாக இருந்தது.