மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு
- சாப்டூர் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
- அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை சோதனை இட்டபோது டிரம்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து
அந்த டிரம்களில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுப்பதற்காக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.