ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள்
- ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
- துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப் பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர்சி வசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.