உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-04-15 08:40 GMT   |   Update On 2023-04-15 08:40 GMT
  • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
  • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News