குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி
- குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
- அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய் களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தச்சம்பத்து முதல் மேலக்கால் பாலம் வரை உள்ள சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய் களை பதித்து விட்டு அதை மூடும்போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்வதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
குறிப்பாக தச்சம்பத்து பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியும் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கார்களில் செல்வோர் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதித்த பின்பு அதை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும், பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.