உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன் வசந்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 

அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு

Published On 2023-03-28 09:11 GMT   |   Update On 2023-03-28 09:11 GMT
  • அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
  • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப் பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்பட கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி வேண்டியும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிமற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரில் மனுக்கள் குறித்து விசாரணை செய்து உடன டியாக நடவடிக்கை எடுக் கும்படி உத்தரவிட்டார்.

மேலும் இந்த முகாமில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர்.

Tags:    

Similar News