- சோழவந்தான் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க கூட்டம் நடந்தது.
- ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கதிரேசன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர். அய்யனார் வரவேற்றார். சோழவந்தான் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்களும், புதிதாக ரெயில்கள் நின்று செல்வதற்கும் பாண்டியன், பொதிகை, அந்தியோதயா, திருப்பதி எக்ஸ்பிரஸ் , மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனோ காலத்தில் உயர்த்தப்பட்ட ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கிருஷ்ணன், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக அய்யனார் பொருளாளராக சரவணன், துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆனந்தகுமார், பாலசுப்ரமணியன், முத்துகாமாட்சி, முனியம்மாள் ஆகியோரும் சட்ட ஆலோசர்களாக ராஜேந்திரன், ஜோதிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துப்பாண்டி நன்றி கூறினார்.