ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்றம்
- புதிய கட்டிட பணிக்காக ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாற்று வேலைக்காக குடிநீர் குழாய் சின்டெக்ஸ் உடைக்கப்பட்டது.
இக்கோவிலில் பக்தர்க ளுக்காக சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்ப டுத்திய பா.ஜ.க. விவசாய அணியின் மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது:-
ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குளிப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர்.
இப்பகுதி பக்தர்களுடைய வேண்டு கோளை ஏற்று பக்தர்கள் வசதிக்காக எனது சொந்த செலவில் திருப்பணியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுத்தேன்.
இந்த தண்ணீர் தொட்டி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி வநதனர்.
தற்போது அதனை நிர்வாகம் இடித்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளமதி கூறும்போது, நாங்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தவில்லை. இந்த தொட்டியை அன்னதான மண்டபத்தின் அருகில் விரிவாக கட்டப்போகி றோம். இந்த இடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு பணி ஆணையும் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.