உள்ளூர் செய்திகள்

ஆர்.பி.‌உதயகுமார்

வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.‌உதயகுமார்

Published On 2022-06-09 12:14 GMT   |   Update On 2022-06-09 12:14 GMT
  • வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.‌உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • தென்மாவட்டத்தில் முக்கிய அணையாக வைகை அணை திகழ்கிறது.

மதுரை

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை யை தூர்வாரியது போல் வைகை அணையை தூர்வார வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கடந்த 1934-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் மிக பழமையான அணையான மேட்டூர் அணையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தூர்வாரினார். இதன் மூலம் சிறு குறு விவசாயிகளின் நிலங்கள் உயிர்ச்சத்து பெறும் வண்ணம் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கினார்

அதேபோல் பொது மக்களின் சொந்த பயன் பாட்டிற்காகவும், மண்பானை தொழிலாள ர்களு க்கும் வண்டல் மண், சவுடுமண் ,சரளைமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வழங்கினார்.

தென்மாவட்டத்தில் முக்கிய அணையாக வைகை அணை திகழ்கிறது. இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக பாசன பரப்பு, 45,000 ஏக்கர் இருபோக பாசன பரப்பு,ஒரு லட்சத்து 30ஆயிரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனமாக மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பயன்பற்று வருகின்றனர்.மேலும் குடிநீர் ேதவை யைப் பூர்த்தி செய்து வருகிறது.

ஆகவே மேட்டூர் அணையை தூர்வாரி அதன் மூலம் கிடைத்த வண்டல் மண்ணை சிறு குறு விவசாயிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தற்போது வைகை அணையை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை வருவாய் ஈட்ட ஒருபுறம் இருந்தாலும் அதில் எழை எளிய விவசாயிகள் பயன் பெறும் வகையில் வண்டல் மண்ணை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News