உள்ளூர் செய்திகள்

கப்பலூர் டோல்கேட்டை அகற்ற கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்

Published On 2022-08-17 07:52 GMT   |   Update On 2022-08-17 07:52 GMT
  • கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம் யூனியனை சேர்ந்த கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்புலட்சுமி, நிர்வாக உதவியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கீழக்கோட்டை, லட்சுமிபுரம், மல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கோட்டை ஊராட்சியில் சுமார் 529 ரேசன்கார்டுகள் உள்ளன. ஆனால் கிராமமக்கள் ரேசன் பொருள்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள கிரியகவுண்டன்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. 500 கார்டுகளுக்கு மேல் இருந்தாலே புதிய கடை திறக்கவேண்டும் என்ற அரசு உத்தரவுபடி கீழக்கோட்டை கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்கவேண்டும்.விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ணஎனவே கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மேலக்கோட்டை

மேலக்கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பற்றாளர் முகமதுஇலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலக்கோட்டை ரெயில்வேத ரைப்பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும்.மேலக்கோட்டையில் இருந்து 4 வழிச்சாலையை கடந்து எதிரேயுள்ள ஹவுசிங்போர்டு காலனிக்கு செல்லவேண்டி உள்ளது. 4 வழிச்சாலையில் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க பேரிகார்டுகள் வைக்கவேண்டும். ஹவுசிங்போர்டு காலனியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. அங்கு ரோடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அவற்றை சரிசெய்யவேண்டும். இல்லையெனில் ஹவுசிங்போர்டுகாலனியை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொ.புளியங்குளம்

திருமங்கலம் ஒன்றியம் கொ.புளியங்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவகாமிதர்மர் தலைமை தாங்கினார். திருமங்கலம் யூனியன் ஆணையாளர் சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். கிராமத்தின் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News