உள்ளூர் செய்திகள்

பிணந்திண்ணி செல்வம்.

பணம் பறித்த ரவுடி கூட்டாளி கைது

Published On 2022-06-16 09:33 GMT   |   Update On 2022-06-16 09:33 GMT
  • மதுரையில் பணம் பறித்த ரவுடி கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
  • இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

மதுரை

மதுரை திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 44). இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாலமுருகன் நேற்று மதியம் காளவாசலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் கத்திமுனையில் மிரட்டி ரூ. 2500-யை பறித்து சென்றார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி, அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது பாலமுருகனிடம் கத்தி முனையில் பணம் பறித்து சென்றது பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு கீரைத்துறைக்கு சென்று, அங்கு உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

இதில் அவர் கீரைத்துறை, கோதண்டராமன் மகன் செல்வம் என்ற பிணந்திண்ணி செல்வம் (24) என்பது தெரியவந்தது.

அவர் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் ஆவார். 

Tags:    

Similar News