உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-11-11 05:49 GMT   |   Update On 2023-11-11 05:49 GMT
  • பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மதுரை

திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாது காப்பான முறையில் கொண்டாட மாணவ மாண விகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலாஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

திருமங்கலம் தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் கவியரசு மற்றும் வரதராஜன் ஆகியோர் பேசுகையில், பட்டாசுகளை வெடிக்க செய்யும் பொழுது எதிர் பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுக்கும் வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அருகில் மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி களை வைத்துக்கொள்ள வேண்டும். நமது உடைக ளையும் பாதுகாப்பான முறையில் அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

வீட்டில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் சட்டியில் ஏற்படும் தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. அடுப்பை உடனடியாக அணைத்துவிட்டு எண்ணை சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வேண்டும் என தெரிவித்தனர்.

முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News