- மரக்கன்று நடும் விழா நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி ஊராட்சி சின்ன ராமேஸ்வரம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2500 மரக் கன்றுகள் நடப்பட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 20 வகையான மர கன்றுகள் நட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலை வர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, சாலை ஆய்வாளர்கள் பாஸ்கர், பாண்டி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.