அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
- மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரையில் உள்ள எம்.கே.ஆர். அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கிலப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் அதிபகவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிர மணியன் சிறப்புரையாற்றி னார். அறிவியல் கண்காட்சியில் இதயம் ராஜேந்திரன் ரெசிடென்சியல் பள்ளி முதலிடத்தை வென்று பரிசு பெற்றது. 2ம் இடத்தை வி.எம்.ஜே. பள்ளி பிடித்தது.
இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெமினி பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர்-தாளாளர் காசிமணி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.