வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
- வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மதுரை
மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.
இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.