உள்ளூர் செய்திகள்

நீதிமன்றத்தில் பாம்புகள் நடமாட்டம்

Published On 2023-07-01 08:43 GMT   |   Update On 2023-07-01 08:43 GMT
  • நீதிமன்றத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திரு மங்கலம் முன்சீப் கோர்ட் சார்பு நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வட்டாட்சி யர் அலுவலகம் வளாகத்தில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது திடீரென பொது மக்களை பார்த்தவுடன் அங்கிருந்த மரத்தில் ஏறியது.

அங்கிருந்தவர்கள் பாம்பை அப்புறப்படுத்த முற்பட்டனர் ஆனால் பாம்பு மரத்தில் கிளைக்கு சென்றது. இந்நிலையில் இது தொடர்பாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீய ணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் கழித்து வந்தனர்.

அதன் பின் நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர் ஆனால் பாம்பு தென்பட வில்லை பின்பு அங்கிருந்து சென்று விட்டனர். நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி ஏதும் இல்லை. மேலும் தற்போ துள்ள கழிப்பறைக்கு செல்லும் வழியில் புதர்மண்டி காணப்படு கிறது.

இதனால் இது போன்ற விஷம் தன்மை கொண்ட பாம்புக்கள் அவ்வப்போது நீதிமன்ற வளாகத்தில் தென் படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற் றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News