ஸ்ரீஜெயபிரபா- அழகர் ஜூவல்லர்ஸ் இல்ல திருமணம்
- ஜெயபிரபா- அழகர் ஜூவல்லர்ஸ் இல்ல திருமணம் மதுரையில் நாளை நடக்கிறது
- திருமண விழா ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வருகின்றனர்.
மதுரை
மதுரை ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் சேர்மன் கே.வி.கே.ஆர். பிரபாகரனின் சகோதரர், கே.வி.கே.ஆர். காவேரி கிருஷ்ணன் என்ற தனசேகரன் மகள் டாக்டர். நந்தினிக்கும், தூத்துகுடி அழகர் ஜூவல்லர்ஸ் சேர்மன் வி.எஸ்.ஏ. ஜெயராமனின் சகோதரர் வி.எஸ்.ஜி. பத்மநாபன் மகன் என்ஜினீயர் ஸ்ரீராம் கோவிந்துக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட உள்ளது.
இந்த திருமணம் நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மதுரை அனுப்பானடி ரிங்ரோடு வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமண விழா ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் சார்பில் கே.வி.கே.ஆர். பிரபாகரன்- ஜெயந்தி, கே.வி.கே.ஆர். காவேரி கிருஷ்ணன் என்ற தனசேகரன்- பவித்ரா, டாக்டர் வி.ஆர். தனசேகரன்- கமலவேணி, வி. பாலாஜி- சங்கரதேவி, ஆர். பாலாஜி- நிவேதிதா, வி.தாமோதரன்- பிரீத்தா, சுஜிதா- பிரபாகரன், டாக்டர் ஸ்ரீநிதி காவேரி கிருஷ்ணன், கே.வி.கே.ஆர்.பி. நரேன் ராஜேந்திர பிரபு, மணமகன் வீட்டார் சார்பில் வி.எஸ்.ஏ. ஜெயராமன்- பத்மாவதி, வி.எஸ்.ஜி. பத்மநாபன்- செண்பகவல்லி, ஜெ. விஷ்ணுரமணா-ஸ்ரீநிதி, நாகராஜ், பாஸ்கர், ஹரீஷ்குமார், ராஜ்குமார் ஆகிேயார் செய்து வருகின்றனர்.