உள்ளூர் செய்திகள்

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், எம்,எல்.ஏ. அய்யப்பன் மற்றும் பஸ் நிலைய வியாபாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு

Published On 2023-07-09 07:03 GMT   |   Update On 2023-07-09 07:03 GMT
  • கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
  • நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன்எம்.எல்.ஏ. தலைமையில் கடைக் காரர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சமரச கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. அய்யப்பன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

அப்போது நகராட்சி கமிஷனர் தற்போது உள்ள பஸ் நிலையம் 1½ ஏக்கரில் உள்ளது. கூடுதலாக ஒரு ஏக்கர் விரிவாக்கம் செய்து 2½ ஏக்கரில் 18 பஸ்கள் நிற்கும் வகையில் புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ள வியா பாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அது போன்று முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அதற்கு உத்தரவாதம் தரமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் கடை வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர்.

தற்காலிக பஸ் நிலையம் உசிலம்பட்டி-தேனி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பஸ்கள் இயங்குகின்றன.

Tags:    

Similar News