திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணியசுவாமி வீதி உலா
- திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடக்கிறது.
- தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.
திருப்பரங்குன்றம்
அறுபடை வீடுகளுன் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி தங்க–மயில் வாகனத்தில் எழுத்த–ருளி வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை கோலாக–லமாக கொண்டாடப்படும்.
இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதி–காலையில் உற்சவர் சன்ன–தியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷே–கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடகி கார்த் திகை மண்டபத்தில் எழுந்த–ருளினார்.
அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிர–மணிய சுவாமி, தெய்வானை இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க–மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.