வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிப்பு
- வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.
சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.
மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.
மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.
லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.
அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.
மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.